சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் 130 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்க திட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை சென்ட்ரல்-கூடூர்,சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், ஜோலார்பேட்டை, சென்னை சென்ட்ரல்-ரேணிகுண்டா ஆகிய வழித்தடத்தில் மணிக்கு130 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

மொத்தம் 413 கி.மீ.தொலைவுக்கு ரயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டு, இப்பாதைகளில் 130 கி.மீ. வரையிலான வேகத்தில் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, 1,218 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டு, இப்பாதைகளில் 110 கி.மீ. வேகத்தில் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் ரயில் வேகம் 110 கி.மீ. இருந்து 130 கி.மீ. ஆக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

முக்கியமான வழித்தடங்களில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்காக, ரயில் பாதைகளின் தரத்தை உயர்த்துவது சிக்னல் தொழில்நுட்ப மேம்பாடு, வளைவுகளை நீக்குவது, தேவையற்ற நுழைவுகளை அகற்றுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சென்னை எழும்பூர்-செங்கல்பட்டு-விழுப்புரம் வழித்தடத்தில் தற்போது மணிக்கு 90 முதல் 110 கி.மீ. வரையிலான வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்தபாதையில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்தஆண்டு மார்ச் மாதத்துக்குள் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் செல்லும்போது, பயண நேரம் 45 நிமிடம் வரை குறையும்.

இதுபோல, ஜோலார்பேட்டை-கோயம்புத்தூர் வழித்தடத்தில் விரைவு ரயில்களை 110 முதல் 130 கி.மீ. வரை வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்