2 ஆயிரம் மெகாவாட் திறனில் சூரியசக்தி மின்நிலையம் - தமிழக மின்வாரியம் திட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் சூரியசக்தி பூங்கா திட்டத்தில், 4 ஆயிரம் மெகாவாட் திறனில் சூரியசக்தி மின்நிலையம் அமைக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது.

இதற்கான அறிவிப்பைக் கடந்த 2021-ம் ஆண்டு வெளியிட்டது. ஒரு மெகாவாட்டுக்கு 5 ஏக்கர் நிலம் தேவை.

எனவே, துணைமின் நிலையங்களுக்கு அருகில் நிலம் வழங்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மின்வாரியம் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவாரூர், கரூர், சேலம், நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலம் கண்டறியப்பட்டன. அந்தமாவட்டங்களில் தலா 50 முதல்100 மெகாவாட் என 2 ஆயிரம்மெகாவாட் திறனில் மின்நிலையங்கள் அமைக்கத் திட்டமிட்டு முதல் பூங்கா திருவாரூரில் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இத்திட்டத்தை தனியார்பங்கேற்புடன் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தை மின் வாரியம் விலைக்கு வாங்கும். குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் சூரியசக்தி மின்நிலையத்தை மின்வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

பசுமை மின்சாரத்துக்கு என தமிழக அரசு புதிய நிறுவனத்தைத் தொடங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. எனவே, அந்நிறுவனம் மூலமாக வங்கி, நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி முதல் கட்டமாக 2 ஆயிரம் மெகாவாட் திறனில் சூரியசக்தி மின்நிலையம் அமைக்கத் திட்டமிடப் பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE