மதுரை: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட வழக்குகள் காரணமாக, சுப.உதயகுமாருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக்-அவுட் நோட்டீஸை திரும்ப பெற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகர்கோவிலைச் சேர்ந்த சுப.உதயகுமார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: துருக்கியில் 2022-ல் நடைபெற்ற சர்வதேச இதழியல் மாநாட்டில் பங்கேற்க எனக்கு பாஸ்போர்ட் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்காக, எனக்கு எதிரானலுக்-அவுட் (தேடப்படும் குற்றவாளி) நோட்டீஸ் நிறுத்தி வைக்கப்பட்டது. சிங்கப்பூர் செல்ல அனுமதி கோரி விண்ணப்பித்தபோது லுக்-அவுட் நோட்டீஸ் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. லுக்-அவுட் நோட்டீஸை திரும்ப பெற உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி நாகார்ஜுன் முன் விசாரணைக்கு வந்தது.
அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரருக்கு எதிராக 2013-ல் லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. மனுதாரர் மீது 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் 15 வழக்குகள் திரும்ப பெறப்பட்டுள்ளன என்றார்.
» ஜி-20 மாநாட்டு முகப்பில் 28 அடி உயர நடராஜர் சிலை: சுவாமிமலையில் இருந்து டெல்லி சென்றது
» கோடநாடு வழக்கில் முன்னாள் அமைச்சர்களை விசாரிக்க வேண்டும் - கனகராஜ் சகோதரர் தனபால் வலியுறுத்தல்
இதையடுத்து நீதிபதி, மனுதாரர் மீது நீதிமன்றத்தில் பிடியாணை நிலுவையில் இல்லை. மனுதாரர் வழக்கு விசாரணைக்கு முறையாக ஆஜராகி வருகிறார். இதனால் மனுதாரருக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸை நெல்லை மாவட்ட எஸ்பி திரும்ப பெற வேண்டும் என உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago