விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

By செய்திப்பிரிவு

சென்னை: ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் எ.தேரணிராஜன் கூறியதாவது: ஆந்திர மாநிலம், பிச்சாட்டூரைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர், அண்மையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது நிகழ்ந்த சாலை விபத்தில் தலையில் பலத்தகாயமுற்றார்.

அவர் கடந்த 4-ம் தேதி ஆபத்தான நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையளித்தபோதிலும், அவை பலனளிக்காமல் அவர் நேற்று காலை மூளைச் சாவு அடைந்தார். இதுதொடர்பாக அவரது பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்டு ஆறுதல் அளித்தோம்.

அவர்கள் அந்தப் பெண்ணின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர். அதன்படி, அவரது இருசிறுநீரகங்கள், கல்லீரல், இரு நுரையீரல்கள் தானமாகப் பெறப்பட்டன. உடல் உறுப்புகளை தானமாக அளித்து பிறருக்கு மறுவாழ்வு அளிப்பவருக்கு உரிய கவுரவத்தை அளிக்க வேண்டும் என்ற நோக்கில் அந்தப் பெண்ணின் உடலுக்கு மரியாதை அணிவகுப்பு நடத்தினோம்.

அவரது உடல் பேட்டரி வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டு இரு புறமும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள், மருத்துவப் பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் அணி வகுத்து நின்று கரம்கூப்பி அந்தப் பெண்ணுக்கு மரியாதை செலுத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்