கேலோ, தேசிய விளையாட்டு பதக்க வீரர்களுக்கு ரூ.2.24 கோடி ஊக்கத்தொகை - முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

By செய்திப்பிரிவு

சென்னை: கேலோ இந்தியா மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 134 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.2.24 கோடிக்கான உயரிய ஊக்கத்தொகைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

மத்திய பிரதேசத்தில் கேலோஇந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி ஜன. 30 முதல் பிப்.11வரை நடைபெற்றது. இப்போட்டியில், பதக்கம் வென்றவர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டது. அதேபோல், 64-வது தேசிய துப்பாக்கிச்சுடும் சாம்பியன்ஷிப் போட்டி, 12-வதுதேசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி, தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் வென்ற வீரர், வீராங்கனை களுக்கும் ஊக்கத்தொகைகள் அறிவிக்கப்பட்டன.

மேலும், 2023-ம் ஆண்டுக்கான சதுரங்க கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற எம்.பிரனேஷ், 2019-ம் ஆண்டுக்கான பெண்கள் சர்வதேச சதுரங்க மாஸ்டர் பட்டம் வென்ற ரக்ஷித்தா ரவி என மொத்தம் 134 விளையாட்டு வீரர்கள் மற்றும்வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக மொத்தம்ரூ.2 கோடியே 24 லட்சத்து 50 ஆயிரம் வழங்கும் அடையாளமாக, 10 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயிற்சியாளர்களான ருமேனிய நாட்டைச் சேர்ந்த தட களப் பயிற்சியாளர் பெட்ராஸ் பெட்ரோசியன், டச்சு நாட்டைச் சேர்ந்த ஹாக்கிபயிற்சியாளர் எரிக் வோனிக், அமெரிக்காவைச் சேர்ந்த டென்னிஸ் சஞ்சய் சுந்தரம் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா, துறையின் செயலர்அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாதரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE