பழநி கோயிலில் அறிவிப்பு பலகை வைக்கும் உத்தரவை நீக்க கோரி வழக்கு

By செய்திப்பிரிவு

மதுரை: பழநி கோயிலில் இந்து அல்லாதவர்கள் நுழைய தடை விதிக்கும் அறிவிப்பு பலகையை வைக்க வேண்டும் என்ற உத்தரவை நீக்கக் கோரி இந்து சமய அறநிலையத் துறை மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்தது. பழநியைச் சேர்ந்த செந்தில் குமார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், இந்து அறநிலையத் துறை ஆலய நுழைவு விதிகளில், ‘இந்து மதத்தை சாராதோர், இந்து கோயிலுக்குள் நுழையக் கூடாது’ எனக் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பழநி கோயிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. பின்னர் அந்த அறிவிப்பு பலகை திடீரென அகற்றப்பட்டது. இந்த நடவடிக்கை இந்து மதத்தினரின் நம்பிக்கைகளை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே, இந்து அல்லாதவர்கள் நுழையத் தடை விதிக்கும் அறிவிப்பு பலகையை அதே இடத்தில் வைக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்து அல்லாதவர்கள் கோயிலில் நுழைய தடை விதிக்கும் அறிவிப்பு பலகையை மீண்டும் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி, பழநி கோயிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அறிவிப்பு பலகையை வைக்க வேண்டும் என்ற உத்தரவை நீக்கக்கோரி அறநிலையத் துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், கோயிலுக்குள் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழையக் கூடாது என்ற அறிவிப்பு, அரசியலமைப்பு சட்டம் பிரிவு 15-க்கு எதிராக உள்ளது. அப் பிரிவில் சாதி, மத அடிப்படையில் மக்களை பிரித்து பார்க்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இதனால் பழநி கோயிலில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழையத் தடை விதித்து அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவை விலக்கிக் கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணையை தள்ளி வைத்து நீதிபதி எஸ்.ஸ்ரீமதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்