பொது சேவை மையங்களில் ‘மொய்' - கூடுதல் கட்டண வசூலால் செங்கை மக்கள் அதிருப்தி

By பெ.ஜேம்ஸ்குமார்


செங்கல்பட்டு: செங்கை மாவட்டத்தில் உள்ள பொதுசேவை மையங்களில் மொய் வைப்பது போல அதிக கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழக மாணவர்கள் பள்ளி மற்றும், மேல்படிப்பு பயில, அரசு பணியில் சேர, போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க, கடனுதவி பெற என பல்வேறு தேவைகளுக்காக வருமானம், சாதி, குடியிருப்பு, முதல் பட்டதாரி, விதவை, இறப்பு, வாரிசு சான்று மற்றும் புதிய குடும்ப அட்டை பெறுதல், பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல், பட்டா பெயர் மாற்றம் போன்ற அனைத்து தேவைகளுக்கும், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இதையடுத்து அந்த விண்ணப்பங்கள் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, தாலுகா அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இதைத்தொடர்ந்து தனி தாசில்தார், தாசில்தார் ஆகியோர் ஆய்வு செய்த பிறகு, சான்று வழங்கப்படும். இதனால் விண்ணப்பித்து காலதாமதம் ஆனதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர்.

இதனை போக்க, அரசு சார்பில் அரசு பொது சேவை மையம் தொடங்கப்பட்டு, அதன் மூலம் உடனடியாக சான்றுகள் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை கொண்டு வரப்பட்டது. மேலும், மக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும், அரசு அலுவலகங்கள், தனி நபர்களுக்கும் அரசு அனுமதி வழங்கி, பொது சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் நகர பகுதிகளில் தனி நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, பொது சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு சான்றுக்கு விண்ணப்பிக்க ரூ.60 கட்டணம் பெற வேண்டும் என அரசு நிர்ணயித்துள்ளது. அதன்படி சான்று விண்ணப்பித்தவுடன் ரசீது வழங்கப்பட வேண்டும். அதில் கட்டணம் ரூ.60 என குறிப்பிட்டிருக்கும்.

ஆனால் ரூ.100 வசூல் செய்வதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் ஏழை மாணவர்கள், வசதி இல்லாதவர்கள் பெரும் சிரமமடைகின்றனர். இ சேவை மைய நிர்வாகிகள் சிலர் சம்மந்தப்பட்ட துறை அரசு அலுவலர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு புரோக்கர்களாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே, கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் சிலர் கூறியது: பொது சேவை மையங்களில் ஆதார் எண்ணை புதுப்பித்தல், திருத்தம் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கு, அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்காமல், கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். குறைந்த பட்சமாக ரூ.300 முதல் ரூ.500 வரை வசூலிக்கின்றனர். குறிப்பாக கிராமப்புறங்களில் இந்த வசூல்வேட்டை அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அவதிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர்.

பொது சேவை மையங்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டண பட்டியலை அந்தந்த சேவை மைய அறிவிப்பு பலகை வைத்து, அந்த கட்டணத்தை வசூலிக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பொது சேவை மையங்களின் அனுமதியை ஆட்சியர் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தார். ஆய்வு செய்ய வேண்டும்

மு.அய்யப்பன்

இதுகுறித்து தாம்பரத்தை சேர்ந்த மு.அய்யப்பன் கூறும்போது, அரசு மற்றும் தனியார் பொது சேவை மையங்களில் ரூ.100 வசூல் செய்கின்றனர். சில இடங்களில் இதை விட அதிகமாகவும் வசூலிக்கின்றனர். ஏன் அதிக கட்டணம் வசூல் செய்கிறீர்கள் என கேட்டால், இன்டர்நெட் சார்ஜ், ஸ்கேனிங் சார்ஜ் என கூறுகின்றனர்.

இந்த கட்டாய வசூல் அனைத்து சேவை மையத்திலும் நடக்கிறது. எனவே மாவட்ட அதிகாரிகள் அனைத்து பொது சேவை மையங்களிலும் திடீர் ஆய்வு செய்து கூடுதல் தொகை வசூலிக்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து மாவட்ட மின் ஆளுமை திட்ட அதிகாரி கூறியது: பொது சேவை மையம் நடத்துவதற்கு விண்ணப்பிக்கும் நபர்களிடம் அனுமதி வழங்கும் போதே எந்தெந்த சான்றிதழுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறோம். மேலும் பொதுமக்களிடம் கூடுதல் தொகையை கட்டணமாக வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம். முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்