இண்டியா கூட்டணியில் இணையுமா மக்கள் நீதி மய்யம்? - ஓரிரு நாட்களில் முடிவு என செய்தித் தொடர்பாளர் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: இண்டியா கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைவது தொடர்பாக ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் கூறினார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது நடைமுறை சாத்தியமில்லாத ஒன்று. மத்திய பாஜக அரசு மாற்றப்பட வேண்டும். அதற்கு காங்கிரஸ்தான் மாற்று என்ற எண்ணத்தில் கட்சித் தலைவர் கமல்ஹாசன் உறுதியுடன் இருக்கிறார். மேலும், ராகுல் காந்தியுடன் இணக்கமாகவும் இருக்கிறார்.

வெளிநாட்டில் உள்ள கமல்ஹாசன் வரும் 5-ம் தேதிக்குள் தமிழகம் திரும்பத் திட்டமிட்டுள்ளார். வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணியா அல்லது தனித்துப் போட்டியா என்பது குறித்து அவர் தமிழகம் வந்த பின்னர் முடிவு செய்யப்படும்.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்ததில், நியாயமான கருத்து உள்ளதை புரிந்து கொண்டுள்ளோம். இண்டியா கூட்டணியில் செப்டம்பருக்குள் தொகுதிப் பங்கீடு முடியுமா என்பதை இப்போது கூற முடியாது. அதற்கு நிறைய கட்டங்கள் உள்ளன. கமல்ஹாசனின் அறிவிப்புக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

பாஜகவை எதிர்த்து களம் காணவே மக்கள் நீதி மய்யம் விரும்புகிறது. தனியார் தொலைக்காட்சித் தொடரில் அவர் பங்கேற்பதால், கட்சிப் பணிகள் எந்த வகையிலும் பாதிக்கப்படாது. தேர்தல் தொடர்பான செயல் திட்டங்களை உடனடியாக வகுப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, செயல்பட்டு வருகிறோம். இம்மாத இறுதிக்குள் தேர்தலுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை முடிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்