நாமக்கல்: நாமக்கல் அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி, விவசாயிகள், வளையப் பட்டியில் கஞ்சித் தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டாரத்தில் உள்ள, வளையப்பட்டி, பரளி, என்.புதுப்பட்டி, அரூர் சுற்றுப்புற பகுதிகளில் சிப்காட் தொழிற் பேட்டை அமைக்கப் படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக, வருவாய்த்துறை மூலம் நில அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
மோகனூர் பகுதியில் சிப் காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி சிப் காட் எதிர்ப்பு இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புடன் பல்வேறு அரசியல் கட்சியினரும், விவசாயி களும் இணைந்து சிப் காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம் வளையப்பட்டியில் நேற்று நடைபெற்றது. இதில், பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் சத்திய மூர்த்தி, மாவட்ட பொது செயலாளர் ரவி, கொமதேக ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ரவிச் சந்திரன், மோகனூர் ஒன்றிய செயலாளர் சிவகுமார்,
தமிழக விவசாய முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் பால சுப்ரமணியம், சிப் காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராம் குமார் உள்பட திரளான விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு சிப் காட் தொழிற்பேட்டை அமைப் பதற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago