சென்னை: தமிழகத்தில் 4 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானாது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று (செப்.3), கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
செப்.4ம் தேதி, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானாது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
செப்.5ம் தேதி, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானாது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோவை மாட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
» திண்டிவனம் தொகுதியில் தீர்க்க முடியாத 10 கோரிக்கைகள் - அதிமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு
» தடுப்புச் சுவர் இல்லாத பள்ளத்தாக்குகள் - கொடைக்கானல் மலையில் பயணிகள் ‘திக் திக்’ பயணம்!
செப்.6ம் தேதி, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானாது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
செப்.7ம் தேதி, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானாது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 - 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மழை: சென்னையில், பகல் நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலை முதல் நகரின் பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்தது. இதனால், வெப்பம் குறைந்து குளுமையான சூழல் நிலவியது. கனமழை காரணமாக, நகரின் முக்கிய சாலைகளில், மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், கருமேகங்கள் சூழந்ததால், சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன. அண்ணாசாலை, கிண்டி, எழும்பூர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, திருவல்லிக்கேணி, தி.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும், ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் இன்று மாலை முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ததது. இந்த திடீர் கனமழையால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago