கஸ்தூரி அண்ட் சன்ஸ் லிமிடெட் தலைவராக வேணுகோபால் கஸ்தூரி தேர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: கஸ்தூரி அண்ட் சன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக வேணுகோபால் கஸ்தூரி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

தி இந்து ஆங்கில நாளிதழ், பிசினஸ் லைன், ஃப்ரண்ட்லைன் மற்றும் ஸ்போர்ட் ஸ்டார் ஆகிய இதழ்களை வெளியிடும் தி இந்து குழுமத்தின் வெளியீட்டு நிறுவனமான THG பப்ளிஷிங் பிரைவேட் லிமிடெட் (THGPPL) நிறுவனத்தை உள்ளடக்கியது கஸ்தூரி அண்ட் சன்ஸ் லிமிடெட் நிறுவனம் ஆகும்.

தற்போது கஸ்தூரி அண்ட் சன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவ ராக வேணுகோபால் கஸ்தூரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தி இந்து ஆங்கில நாளிதழில் மிக நீண்ட காலம் ஆசிரியராக பணியாற்றிய ஜி. கஸ்தூரியின் இளைய மகன் வேணுகோபால் கஸ்தூரி ஆவார். இவர் பிசினஸ் லைன் இதழின் நிறுவன நிர்வாக ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

மேலும், இந்து தமிழ் திசை நாளிதழை வெளியிடும் கேஎஸ்எல் மீடியா லிமிடெட், கஸ்தூரி எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட், கேஎஸ்எல் டிஜிட்டல் வென்ச்சர்ஸ், சென்னை இன்டர் நேஷனல் சென்டர் மற்றும் ஸ்போர்ட்டிங் பாஸ்டைம் இந்தியா லிமிடெட் ஆகியவற்றின் இயக்குநராகவும் வேணு கோபால் கஸ்தூரி உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்