சென்னை: வேலூரில் வரும் 17-ம் தேதி திமுக முப்பெரும் விழா நடைபெறவுள்ள நிலையில், பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பெரியார் பிறந்த நாள் (செப். 17), திமுகவை தோற்றுவித்த அண்ணா பிறந்த நாள் (செப்.15), திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் (செப். 17)ஆகிய மூன்றையும் ஒன்றிணைத்து, திமுக சார்பில் ஆண்டுதோறும் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவுடன் சேர்த்து திமுக முப்பெரும் விழா, வரும் 17-ம் தேதி வேலூரில் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் விருதுகள் பெறுவோரின் பெயர்களை திமுக தலைமை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பெரியார் விருது மயிலாடுதுறை கி.சத்தியசீலன், அண்ணா விருது மீஞ்சூர் க.சுந்தரம், கலைஞர் விருது அமைச்சர் ஐ.பெரியசாமி, பாவேந்தர் விருது தென்காசி மலிகா கதிரவன், பேராசிரியர் விருது பெங்களூரு ந.ராமசாமி ஆகியோருக்கு வழங்கப் படுகிறது.
» ரஜினிகாந்துடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு - அரசியல் நிலவரம் குறித்து பேச்சு?
» ஆதித்யா எல்-1 விண்கலம் ஏவுதல் வெற்றி - அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
திமுக தோற்றுவிக்கப்பட்ட செப். 17-ம் தேதியை இந்த ஆண்டு பவள விழாவாகக் கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago