திருவள்ளூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வேணு கோபாலை ஆதரித்து, முதல்வர் ஜெயலலிதா நாளை (8-ம் தேதி) பெரியபாளையம் அடுத்த வடமதுரையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இதற்காக பெரியபாளையம் அடுத்த வடமதுரையில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது.
இக்கூட்டத்திற்கு சுமார் 2.5 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, கடந்த ஒருவாரமாக பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன், முதல்வர் வரும் ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்காக, ஹெலிபேட் அமைக்கும் பணியும் வேக மாக நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அம்மா வாய்ஸ் மூலம், 4.5 லட்சம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் ரமணா, மூர்த்தி, அப்துல் ரஹீம் மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பிரச்சாரக் கூட்டம் நடைபெறும் இடத்தை தினமும் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், பாதுகாப்பு பணியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago