அன்பில் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் மறியல்: கல்வீச்சில் பேருந்து சேதம்; போலீஸார் தடியடி

By செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி மாவட்டம் அன்பில் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்காக ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைக்க போலீஸார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

லால்குடி வட்டத்துக்குட்பட்ட 105 கிராம மக்களின் தேவைக்காக இடையாற்றுமங்கலம் கொள்ளிடம் ஆற்றில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான பணிகள் அண்மையில் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, தங்கள் பகுதியில் விவசாயப் பணிகள், குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, பணிகள் நிறுத்தப்பட்டன.

இதையடுத்து, லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணிகள் சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அன்பில், ஜங்கம்ம ராஜபுரம், மங்கம்மாள்புரம், அரியூர், செங்கரையூர்,‌‌ கல்விக்குடி உட்பட 10 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் அன்பில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே நேற்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதையறிந்து அங்கு வந்த லால்குடி கோட்டாட்சியர் சிவ சுப்ரமணியன், டிஎஸ்பி அஜய்தங்கம், காவல் ஆய்வாளர் உதயகுமார் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மறியலை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், பொதுமக்கள் மறியலை கைவிட மறுத்தனர்.

இதையடுத்து, போலீஸார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்து செல்ல அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த அரசு பேருந்தின் மீது கற்களை வீசி கண்ணாடியை உடைத்தனர்.

மேலும், போலீஸார் மீதும் கற்களை வீசினர். இதையடுத்து, போலீஸார் லேசான தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைந்து போகச் செய்தனர். பின்னர், மறியல், கல்வீச்சில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 75 பேரை போலீஸார் கைது செய்தனர். திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அங்கு வந்து விசாரணை நடத்தினார். அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்