அண்ணாமலையின் 2-ம் கட்ட நடைபயணம்: ஆலங்குளத்தில் 4-ம் தேதி தொடங்குகிறார்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தனது 2-ம் கட்ட நடைபயணத்தை ஆலங்குளத்தில், 4-ம் தேதி தொடங்க உள்ளார்.

ஊழலுக்கு எதிராக ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வரும் அண்ணாமலை, தனது முதல் கட்ட நடைபயணத்தை கடந்த மாதம் 22-ம் தேதி நிறைவு செய்தார். மொத்தம் 23 நாட்கள் மேற்கொண்ட முதல்கட்ட நடைபயணத்தில் 41 தொகுதிகளில் மக்களைச் சந்தித்த அண்ணாமலை, மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை விளக்கி கூட்டங்களில் பேசினார்.

தென்காசியில் பொதுக்கூட்டம்: இந்நிலையில், 2-ம் கட்ட நடைபயணம் செப்.3-ம் தேதி ஆலங்குளத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 4-ம் தேதி ஆலங்குளத்தில் 2-ம் கட்ட நடைபயணத்தை தொடங்கி, தொடர்ந்து தென்காசி, ராஜபாளையம், கம்பம், கொடைக்கானல், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கோவை, ஊட்டி என பல்வேறு பகுதிகளில் 19 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு, செப்.28-ம் தேதி மேட்டுப்பாளையத்தில் நிறைவு செய்கிறார்.

இதில் தென்காசியில் நடைபெறும் நடைபயணத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார்.

கோவையில் ஜெய்சங்கர் பங்கேற்பு: இதேபோல், கோவையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

40 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்