செப். 10-ம் தேதி வரை நடைபெற உள்ள சந்திரயான் குறித்த இணையவழி கருத்தரங்கில் பிரபல விஞ்ஞானிகள் உரை

By செய்திப்பிரிவு

திருச்சி: தமிழ்நாடு வானவியல் மற்றும் அறிவியல் மன்றம், இந்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார், தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், பெங்களூருவிலுள்ள இந்திய வானியற்பியல் நிறுவனம், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி ஆகியவை இணைந்து, `இந்து தமிழ் திசை' நாளிதழை மீடியா பார்ட்னராக கொண்டு நடத்தும் சந்திரயான் குறித்த இணைய வழி தொடர் கருத்தரங்கம் நேற்று தொடங்கியது.

இக்கருத்தரங்கம் செப்.10 வரை இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறுகிறது. இதில் சந்திரயான்-I, II, III குறித்த அரிய தகவல்களை அறிஞர்கள் தருவர். டெல்லியில் உள்ள இந்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனத்தின் முதுநிலை விஞ்ஞானி முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில், சந்திரயானும் செயற்கை நுண்ணறிவும் எனும் தலைப்பில் பேசினார்.

நாளை (செப்.2) நிலவின் அறிவியல் ஆய்வுக்கான மண் மாதிரி உருவகப்படுத்துதல் எனும் தலைப்பில் திண்டுக்கல் காந்தி கிராம் நிகர்நிலை பல்கலைக்கழக புவி அமைப்பியல்
துறை விஞ்ஞானி முனைவர் சு.அறிவழகன், செப்.4-ல் நிலவும், நிலவு குறித்த அறிவும்-அறிவியலும் எனும் தலைப்பில் பெங்களூரு இந்திய வானியற்பியல் நிறுவன விஞ்ஞானி முனைவர் கிறிஸ்பின் கார்த்திக், செப்.6-ல் சந்திரயான்- விக்ரம் தரையிறங்கி கலமும், பிரக்யான் உலாவிக்கலமும் எனும் தலைப்பில் கொடைக்கானல் சூரிய ஆய்வக பொறுப்பு தலைமை விஞ்ஞானி, பேராசிரியர் எ.எபினேசர் செல்லச்சாமி ஆகியோர் உரையாற்றுவர்.

மேலும், செப்.8-ல் சந்திரயானும் ஏவு ஊர்தியும் எனும் தலைப்பில் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மைய முதுநிலை விஞ்ஞானி வை.ராஜசேகர், செப்.10-ல்
சந்திரயான்-I, II, III எனும் தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்ற துணைத் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோரும் உரையாற்றுகின்றனர். இதில் கலந்துகொள்ள, கொடுக்கப்பட்டுள்ள கியூஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்யலாம்.மேலும் 94432 27724, 91761 75191, 99867 88022 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE