சொத்து குவிப்பு வழக்கில் ஓபிஎஸ் விடுதலை | உயர் நீதிமன்ற நீதிபதி தாமாக முன்வந்து வழக்கு - இன்று விசாரணை

By செய்திப்பிரிவு

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் ஓ.பன்னீர்செல்வத்தை விடுவித்து 2012-ல் சிவகங்கை நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து தமிழக அமைச்சர்கள் பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரை விடுவித்து வேலூர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றங்கள் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக விசாரித்தார். பின்னர் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து சிவகங்கை நீதிமன்றம் 2012-ல் அளித்த தீர்ப்பை எதிர்த்து தற்போது உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வரவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE