சேலத்தில் உள்ள தனியார் மறுவாழ்வு மையம் சட்டவிரோத காரியங்களில் ஈடுபடுகிறதா? - ஆய்வுக்கு நீதிபதிகள் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: சேலத்தில் உள்ள தனியார் மறுவாழ்வு மையம் சட்டவிரோத காரியங்களில் ஈடுபடுகிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் சூரமங்கலத்தைச் சேர்ந்த மலர்விழி (33) என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஆட் கொணர்வு மனுவில் கூறியிருப்பதாவது: எனது தந்தை நாராயணன் மற்றும் தாயார் சந்திரா ஆகியோர் கொண்டப்பநாயக்கன்பட்டியில் வசித்து வருகி்ன்றனர். எனது மூத்த சகோதரி பிரேமா மற்றும் கடைசி சகோதரி நந்தினி ஆகியோரும் எனது பெற்றோருடன் வசித்து வருகின்றனர்.

எனது தந்தை பெயரில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் உள்ளன. நான் காதல் திருமணம் செய்து கொண்டு டெல்லியில் எனது கணவர் மற்றும் பெண் குழந்தையுடன் வசிக்கிறேன். இதனால் கடந்த 12 ஆண்டுகளாக எனது தாயாரும், 2 சகோதரிகளும் என்னை வீட்டை விட்டு ஒதுக்கி வைத்தனர். எனக்கு எனது தந்தையும், பாட்டியும் மட்டும் ஆதரவாக இருந்து வந்தனர்.

இந்நிலையில் எனது தந்தை பெயரில் உள்ள வீடுகள் உள்ளிட்ட சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் எனது தந்தையை எனது சகோதரிகள் சிலருடன் கூட்டுச் சேர்ந்து, காரில் கடத்தி சேலத்தில் நியூ லைப் என்ற பெயரில் மறுவாழ்வு மையம் நடத்தி வரும் தீபக் என்பவரது கட்டுப்பாட்டில் அடைத்து வைத்துள்ளனர்.

குடிப்பழக்கமே இல்லாத அவரை குடிபோதை மறுவாழ்வு மையத்தில் அடைத்து வைத்து சித்ரவதை செய்து வருகின்றனர். அங்கு சென்று எனது தந்தையை சந்திக்க, அந்த மறுவாழ்வு மையத்தினர் அனுமதி மறுத்து விட்டனர். எனது தந்தையைப் போல பலரை அங்கு அடைத்து வைத்து சித்ரவதை செய்து வருகின்றனர். அந்த மையமே சட்டவிரோதமாக உரிமமும் பெறாமல் செயல்படுவதாக கூறப்படுகிறது.

எனவே எனது தந்தையை மீட்டு ஒப்படைக்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும், எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சேலம் பள்ளபட்டி போலீஸார் மனுதாரரின் தந்தை நாராயணனை அந்த மறுவாழ்வு மையத்தில் இருந்து மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் நாராயணன் தனது விருப்பப்படி தனது இரண்டாவது மகள் மலர்விழியுடன் செல்கிறேன் எனக்கூறியதும், அதற்கு அனுமதியளித்து நீதிபதிகள் ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்தனர். அப்போது மலர்விழி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.விஜயபாஸ்கர், அந்த மறுவாழ்வு மையம் சட்டவிரோதமாக இயங்கி வருகிறது என்றும், நாராயணன் போல பலரை அங்கு அடைத்து வைத்து கொடூரமாக சித்ரவதை செய்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

எனவே அந்த மையத்தில் உள்ளவர்களை மீட்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அதையடுத்து நீதிபதிகள், சேலம் அரிசி பாளையம் சாலையில் உள்ள அந்த தனியார் மறு வாழ்வு மையத்தில் யாரேனும் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்தும், அந்த மையம் சட்ட விரோத காரியங்களில் ஈடுபடுகிறதா என்பது குறித்தும் போலீஸாரும், சமூக நலத்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அடுத்த மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்