‘இண்டியா’ கூட்டணியில் இன்னும் கட்சிகள் இணைய வாய்ப்பு: கொளத்தூர் தொகுதி ஆய்வின்போது முதல்வர் ஸ்டாலின் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: இண்டியா கூட்டணியில் இணையும் கட்சிகளின் எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள், மூடிய நீர் வழித்தடம், அலுவலகக் கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மின்மாற்றிகளைச் சுற்றி, ரூ.15 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கட்டமைப்புகள் மற்றும் ரூ.18.40 கோடி மதிப்பிலான ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.1.09 கோடி மதிப்பில் 5 இடங்களில் மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள், நீர்வளத் துறையின் சார்பில் ரூ.91.36 கோடி மதிப்பில் தணிகாசலம் நகர் கால்வாயில் திறந்த மற்றும் மூடிய நீர் வழித்தடம் அமைக்கும் பணி மற்றும் ரூ.2.50 கோடி மதிப்பில் தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மண்டல உதவி ஆணையர் அலுவலகக் கட்டிடம் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும், கொளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் அருகில் உள்ள அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் மாணவ, மாணவிகளுக்கு `டேலி' பயிற்சி வகுப்புகள், பெண்களுக்கு தையல் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் இடத்தைபார்வையிட்ட முதல்வர், ஹரிதாஸ் சாலையில் உள்ள தாமரைக் குளம் பூங்காவைப் பார்வையிட்டார்.

நிகழ்வின் போது செய்தியாளர்களுக்கு முதல்வர் அளித்த பேட்டி:

இண்டியா கூட்டணி 28 கட்சிகளுடன் உயர்ந்திருக்கிறது. அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அது இன்னும் உயர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

கேஸ் விலை குறைப்பு, இண்டியா கூட்டணிக்கான நெருக்கடியா?

இல்லை, அது தேர்தல் நெருங்குவதற்கான ஒரு அறிகுறி.

பெட்ரோல், டீசல் விலை கூட குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?

ஆச்சரியமில்லை.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, அர.சக்கரபாணி, பி.கே.சேகர்பாபு, சென்னை மேயர் ஆர்.பிரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்