சென்னை: சென்னை, பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மைய (ஓடிஏ) இசைக்குழு சார்பில், சென்னை ஐஐடி-யில் இசை சிம்பொனியை நடத்தியது. இளைஞர்களை ஊக்குவிக்கவும், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்திய ராணுவத்தின் பெருமையை பறைசாற்றும் வகையிலும் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
அதிகாரிகள் பயிற்சி மையத்தின் இசைக் கலைஞர்கள் மற்றும் அதிகாரிகள் பயிற்சி மையத்தில் உள்ள பயிற்சி அதிகாரிகளும் பார்வையாளர்களை மயக்கும் வகையில் சிறந்த பாடல்களை இசைத்து உற்சாகப்படுத்தினர். அதிகாரிகள் பயிற்சி மையத்தின் கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் சஞ்சீவ் சவுகான், சென்னை ஐஐடி இயக்குநர் வி. காமகோடி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மைய அதிகாரிகள், மாணவர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய அதிகாரிகள் பயிற்சி மையத்தின் கமாண்டன்ட், ஐஐடி மாணவர்கள் தேசத்தைக் கட்டமைப்பதில் பங்களிக்க வேண்டும். உலகில் நமது தேசத்தைப் பற்றிய நல்ல கருத்தை உருவாக்க வேண்டும்.ஆயுதப்படைகள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதோடு, நாட்டின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு மாணவர்கள் அர்ப்பணிப்பு, உறுதி ஏற்க வேண்டும் என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago