புத்தாண்டு அன்று கோயில்களில் நள்ளிரவு சிறப்பு பூஜைக்கு தடை விதிக்க மறுத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆங்கில புத்தாண்டு தினத்துக்காக டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவில் இந்து கோயில்களைத் திறந்து வைத்து சிறப்பு பூஜை நடத்துவதற்கு தடை விதிக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது குறித்து வழக்கறிஞர் அஸ்வத்தாமன் என்பவர் தாக்கல் செய்தார். அவரது மனுவில், ''ஆகம சாஸ்திரத்தின்படி, இரவு 9 மணிக்குள் அர்த்தஜாம பூஜையை முடித்து நடையை அடைத்துவிட்டு, காலை 4.30 முதல் 6 மணி வரையிலான பிரம்ம முகூர்த்தத்தில் கோயில் நடையை திறக்க வேண்டும் என்ற நடைமுறையை மாற்றி புத்தாண்டுக்கு கோயில்கள் திறப்பது சரியல்ல.
இரவு நேரங்களில் காற்றில் பிராண வாயுவின் அளவு குறைவாக இருக்கும் என்பதால் மூதாதையர்கள் இந்த நடைமுறையை பின்பற்றி வந்ததாகவும், அதனடிப்படையில் புத்தாண்டு தரிசனத்துக்காக நள்ளிரவில் இந்து சமய கோயில்களை திறந்து வைக்கத் தடை விதிக்க இந்து சமய அறநிலையத்துறை செயலாளருக்கும், அறநிலையத்துறை ஆணையருக்கும் உத்தரவிட வேண்டும் ''என்று கூறப்பட்டிருந்தது
இந்த மனு எம்.எஸ். ரமேஷ், ஜி.ஆர்.சுவாமிநாதன் அடங்கிய விடுமுறை கால சிறப்பு அமர்வு முன்பு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் அஸ்வத்தாமன், ''நள்ளிரவில் நடை திறப்பது ஆகம விதிகளுக்கு எதிரானது. நள்ளிரவில் 12 மணிக்கு நடை திறப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது'' என்று வாதிட்டார்.
அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, ''புத்தாண்டு நள்ளிரவில் நடை திறப்பது ஆகம விதிகளுக்கு எதிரானது இல்லை. காலம் காலமாக கோயில்கள் இவ்வாறே திறக்கப்படுகின்றன. குறிப்பாக பொதுமக்களின் தரிசனத்துக்காக மட்டுமே நடை திறக்கப்படுகிறது. இவ்வாறு திறப்பதில் தவறில்லை. ஆகம விதிகள் எதுவும் மீறப்படவில்லை'' என்று தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தடை விதிக்க மறுத்து உத்தரவிட்டு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் ஜனவரி 8-ம் தேதி விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
47 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago