அரிய நிகழ்வான 'புளூ மூன்': இன்று இரவு காணலாம்

By செய்திப்பிரிவு

சென்னை: ஒரே மாதத்தில் இரண்டு முறை முழு நிலவு தென்படும் புளூ மூன் எனும் வானியல் அரிய நிகழ்வு இன்று (ஆகஸ்ட் 30) நடைபெற இருக்கிறது.

பூமியின் துணைக்கோளான நிலா புவியை சுற்றிவர 29.5 நாட்களாகிறது. அதற்கேற்ப ஒவ்வொரு மாதமும் ஒருமுறை முழு நிலவான பவுர்ணமியும், ஒருமுறை அமாவாசையும் வரும். ஆனால், மிகவும் அரிதாக ஒரே மாதத்தில் இருமுறை பவுர்ணமி தோன்றும். அவ்வாறு ஒரே மாதத்தில் 2 முறை முழு நிலவு தோன்றும் போது, 2-வதாக வரும் முழு நிலவை ப்ளூ மூன் (நீல நிலவு) என்று குறிப்பிடுகின்றனர்.

இந்த நிகழ்வு 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும்.

அந்தவகையில் புளூ மூன் நிகழ்வு இன்று (ஆகஸ்ட் 30) நடைபெற இருக்கிறது. இந்த மாதத்தின் 1-ம் தேதியிலும் பவுர்ணமி தென்பட்டது. தொடர்ந்து 2-வது முழு நிலவுநாளான இன்று புளூ மூன் நிகழ்வை காணலாம். இதற்குமுன்பு 2018, 2020 அக்டோபர் 21-ம்தேதியிலும் புளூ மூன்தென்பட்டது. இந்த அரிய வானியல் நிகழ்வை உலகம் முழுவதும் பார்க்க முடியும். அப்போது நிலவின் அளவு வழக்கத்தைவிட சற்று பெரியதாகவும், அழகாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE