அண்ணா பிறந்த நாளையொட்டி மதுரையில் செப்.15-ல் மதிமுக மாநில மாநாடு

By செய்திப்பிரிவு

மதுரை: மதுரையில் செப்.15-ம் தேதி நடக்கும் மதிமுக மாநாடு தமிழக அரசியலில் திருப்புமுனையாக அமையும் என அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று மதுரை வந்தார். பின்னர் விமான நிலையத்தை அடுத்த வலையங்குளம் கருப்பசாமி கோயில் எதிரே கடந்த ஆக.20-ம் தேதி அதிமுக மாநாடு நடந்த திடலை பார்வையிட்டார். இதே இடத்தில் மதிமுக மாநாட்டை நடத்துவது, பிரதான பந்தல், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்தார்.

பின்னர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் செப்.15-ம் தேதி மதிமுக சார்பில் மாநாடு மற்றும் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடக்கிறது. மாநாட்டுக்காக பிரம்மாண்ட பந்தல் அமைக்க, பந்தல் கலை திலகம் என்று நான் பெயர் சூட்டிய பந்தல் சிவா பொறுப்பேற்றுள்ளார். மாநாட்டுக்கு லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள். மதிமுகவுக்கு திருப்புமுனை மாநாடாக அமையும்.

மத்திய தணிக்கை குழுவில் மருத்துவக் காப்பீட்டில் ஊழல் நடந்துள்ளது குறித்து முதல்வர் ஆதாரம், காரணமின்றி எதையும் கூறி இருக்க மாட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE