விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் திமுகவின் மாவட்டமாகும். திராவிட இயக்க கொள்கைகளின் கோட்டமாக அண்ணாமலை பல்கலைக் கழகம் திகழ்கிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக இளைஞரணியின் மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17-ம் தேதி நடைபெறும் என அறிவிக் கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாவட்ட வாரியாக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் நடத்தப் பட்டு வருகிறது. அந்த வகையில் கடலூர் ஒருங்கிணைந்த திமுக மாவட்ட இளைஞரணி செயல்வீரர் கள் கூட்டம் வேப்பூரை அடுத்த கழுதூரில் உள்ள வெங்கடேஸ்வரா தனியார் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தலைமையுரை ஆற்றிய கடலூர் மேற்கு மாவட்டதிமுக செயலாளரான, தொழிலா ளர் நலன் மற்றும் திறன் மேம் பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் கடலூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில், சேலம் மாநாட்டு நிதியாக ரூ.1 கோடியே 11லட்சத்து 11 ஆயிரத்து 111 வழங்கி, அனை வரும் பெருந்திரளாக சேலம் மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இக்கூட்டத்தில் வேளாண் துறைஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசுகையில், ‘‘உணர்ச்சிப் பிழம்புகளோடு காணப்படும் இளைஞரணியினர் இதே உத்வேகத்தை சேலம் மாநாட்டிலும் காண்பிக்க வேண்டும்'' என்றார். மேலும், கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ரூ.2 கோடி நிதிய ளிக்கப்படும் எனவும் அவர் தெரி வித்தார்.
இக்கூட்டத்தில் திமுக இளை ஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: கடலூர் மாவட்டத்தில் இரு மாவட்டச் செயலாளர்களும் போட்டி போட்டு நிதியளிக்கின்றனர். இது வரவேற்கக் கூடியது. இந்தப்போட்டி சேலம் மாநாட்டிலும் இருக்க வேண்டும். கடலூர் மாவட்டம் திமுகவின் மாவட்டமாகும்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி, தான் கடலூர் மாவட்ட மாப்பிள்ளை என வும், இது சம்பந்தி மாவட்டம் எனவும்எப்போதும் பெருமையாக பேசுவார். அந்த அளவுக்கு கடலூர் மாவட்டம் திமுகவோடு இணைந்துள்ளது. திராவிட இயக்க கொள்கைகளின் கோட்டமாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் திகழ்கிறது. கலைஞர் கருணாநிதிக்கு முதன்முறையாக டாக்டர் பட்டம் வழங்கியதும் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தான்.
கடலூர் மாவட்டத்தில் முன் னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதியின் கால்கள் படாத இடங்களே இல்லை. அந்த அளவுக்கு இந்த மாவட்டத்தில் எத்தனையோ போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி மக்களுக்காக போராடியுள்ளனர். இத்தகைய பெருமை வாய்ந்த மாவட்டத்துக்கு வந்து உங்களை மாநில மாநாட்டுக்கு அழைப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
நீட் தேர்வு விலக்கு தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய அதிமுக, தற்போது எதிர்க்கட்சியாக உள்ளது. அக்கட்சி அதற்காக போராட வேண்டும். அண்மையில் நடைபெற்ற அக்கட்சியின் மாநாட்டில் நீட் தேர்வு தொடர்பாக ஏதேனும் தீர்மானம் நிறைவேற்றினார்களா? இல்லையே.! ஆனால், நீட் தேர்வு விலக்குப் பெறுவது தொடர்பாக நான் உறுதி அளித்தது உண்மை தான்.
அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். அந்த உறுதிமொழிக்கேற்ப உண்மையாக போராடி வருகிறேன். உழைத்துக் கொண்டிருக்கிறேன். அதற்காக போராடி கிராமப்புற மாணவர்களின் கனவை நிறைவேற்றுவேன்" எனத் தெரிவித்தார். கூட்டத்தில் கடலூர் மேற்கு மாவட்ட திமுக விளையாட்டு அணி அமைப்பாளர் வெங்க டேசன், விருத்தாசலம் நகர்மன்றத்தலைவர் சங்கவி முருகதாஸ், நெல்லிக்குப்பம் நகர்மன்றத் தலைவர் ஜெயந்தி ராதா கிருஷ்ணன், நெய்வேலி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன், கடலூர் எம்எல்ஏ கோ.ஐயப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
27 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago