மதுரையில் 2 லட்சம் விதைப்பந்துகள் தயாரித்த 550 கல்லூரி மாணவர்கள்

By சுப. ஜனநாயகசெல்வம்


மதுரை: மதுரை நாகமலை ச.வௌ்ளைச்சாமி நாடார் கல்லூரி மாணவர்கள் 550 பேர் சேர்ந்து 2 லட்சம் விதைப்பந்துகள் தயாரித்தனர்.

உலகளாவிய ஜி20 அமைப்பின் சி-20 பிரிவின் கீழ் இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாத்தல், காலநிலை மாற்றத்தைத் தணித்தல், தாவரங்கள் வன விலங்குகளின் வாழ்வியல், பூமியின் பசுமையை பாதுகாக்கும் வகையில் வனப்பகுதிகளில் விதைகள் தூவும் வகையில், மதுரை நாகமலை ச.வௌ்ளைச்சாமி நாடார் கல்லூரி, மாதா அமிர்தானந்தமயி மடம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு விதைப்பந்து தயாரிக்கும் பயிற்சி நடைபெற்றது. இதில், 550 மாணவ, மாணவிகள் 2 லட்சம் விதைப்பந்துகளை தயாரித்தனர். மழைக்காலங்களில் சாலையின் இருபுறங்களிலும் தூவ திட்டமிடப்பட்டுள்ளனர்.

கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், துணை முதல்வர் செல்வமலர், சுயநிதிப்பிரிவு இயக்குநர் பி.ஸ்ரீதர், பேராசிரியர்கள் ஆகியோர் வழிநடத்தினர். நாடார் மஹாஜன சங்க மண்டல செயலாளர் சேகர்பாண்டியன், ஜனார்த்தனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE