ஆளுநர், முதல்வர், தலைவர்கள் ஓணம் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: கேரள மக்களின் பாரம்பரிய திருவிழாவான ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள்வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

ஆளுநர் ஆர்.என்.ரவி: ஓணம் திருநாளில் நம் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் எனது அன்பான நல்வாழ்த்துகள். மகாபலி நமக்குஅமைதி, வளம், நல்ல ஆரோக்கியத்தை வழங்கி நாம் மகிழ்ச்சியான குடும்பமாக வாழ அருள் புரியட்டும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: கேரளமக்கள் அனைவராலும் எழுச்சியோடும் ஒற்றுமையோடும் கொண்டாடப்படும் அறுவடைப் பெருவிழாவாம் ஓணம் திருநாளை முன்னிட்டுமலையாள சொந்தங்கள் அனைவருக்கும் எனது ஓணம் வாழ்த்து.

வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்ட திராவிட மன்னனான மாவேலியைக் கேரள மக்கள் அன்போடுவரவேற்கும் விழாவாகவும் குறியீட்டளவில் ஓணம் கொண்டாடப்படுகிறது. இத்தகைய ஓணம் திருநாள்சங்க இலக்கியமான மதுரைக்காஞ்சியிலும் ‘மாயோன் மேய ஓண நன்னாள்’ எனச் சிறப்புடன் பாடப்பட்டிருக்கிறது.

இவ்வாறு திராவிடப் பண்பாட்டுடன் பிரிக்க முடியாது, இரண்டறக் கலந்துள்ள ஓணத்தையும் விட்டுவைக்காமல், ஒரு தரப்பினர் ‘வாமனஜெயந்தி’ என அதன் அடையாளத்தைப் பறிக்க முயல்கின்றனர். கேரளமக்களே இத்தகைய முயற்சிகளைப் புறக்கணிப்பார்கள்.

நம் தென்னாட்டு மக்கள் காட்டிய முற்போக்கு அரசியல் பாதையில் ஒட்டுமொத்த இந்தியாவும் பயணிக்கும் ஆண்டாக வருகிற ஆண்டு திகழட்டும்.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: திருஓணம் திருநாளை வசந்த கால விழாவாக உவகையோடு கொண்டாடி மகிழும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துகள். பசி, பிணி, பகை உணர்வுமுற்றிலும் நீக்கப்பட வேண்டும். ஆணவம் அகன்று, சாதி, மத வேறுபாடின்றி சகோதரத்துவத்துடன் மக்கள் அனைவரும் இணைந்து வாழ வேண்டும்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: அகம்பாவம், அகந்தை, ஆணவம் போன்றவற்றை அகற்றிசமத்துவத்துடனும், சகோதரத்துவத்துடனும் ஒருங்கிணைந்து வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் கொண்டாடப்படும் ஓணம் திருநாளில் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: தமிழகத்தில் மொழி ரீதியாக எந்த வேறுபாடும் இல்லாமல் சமத்துவம், சகோதர உணர்வு, மத நல்லிணக்கம் ஆகியவற்றை கடைபிடித்து, சமூக ஒற்றுமையுடன் வாழ்ந்துவரும் மலையாள மக்கள் அனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துகள்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: சாதி, மத, மொழி,இன பேதமற்ற சமூகம் உருவாகவும், தான், தன் குடும்பம் என்ற சுயநலனுக்காக, சாதி மத மொழி அடிப்படையில் பொதுமக்களை பிரித்து, அவர்கள் வரிப்பணத்தை சுரண்டிக் கொழுக்கும் அதிகார மமதைக்கு முடிவுரை எழுதுவதாக இந்த திருவோண தினம் அமையட்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: ஒரு நாடும், அதன் மக்களும்மகிழ்ச்சியாகவும், துன்பங்களைத்தொலைத்து இன்பமாக வாழ்வதற்கான இலக்கணத்தையும் ஓணம் திருநாள் வரையறுத்துள்ளது. அந்தஇலக்கணத்தை பின்பற்றினால் வாழ்வில் இன்பமே நிறையும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

இதேபோல் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமகதலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே வாசன், பாரிவேந்தர் எம்.பி., ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, திருநாவுக்கரசர் எம்பி,பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை, சசிகலா, சமகதலைவர் சரத்குமார் உள்ளிட்டோ ரும் ஓணம் பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்