கூடங்குளம் அணு உலைகளை மூடி தென் தமிழகத்தை அழிவிலிருந்து காக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: கூடங்குளம் அணு உலைகளை மூடி, தென் தமிழகத்தை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்றுவிடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: கூடங்குளம் அணு உலைகளால் தென் தமிழகமே அழிந்துபோகும் என்று நான் பலமுறைஎச்சரித்துள்ளேன். உதாராணத்துக்கு, ஜப்பானில் புகுசிமா அணு உலை அமைக்கப்பட்டபோதே மக்கள் எதிர்த்தார்கள். அமெரிக்காவில் 3 மைல் தீவில் அமைக்கப்பட்ட அணு உலையால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

அதேபோல, சோவியத் ரஷ்யாவில் அமைக்கப்பட்ட செர்னோபில் அணு உலையில் விபத்து நேரிட்டு, லட்சக்கணக்கான மக்கள் வெளியேறினர், எண்ணற்றோர் இறந்தார்கள். ஜப்பானில் அணு உலைக் கழிவு நீரை பசிபிக் கடலில் திறந்துவிட்டுள்ளார்கள். ஜப்பானியர்கள் அணு உலைகளை எதிர்த்துப் போராடி வருகிறார்கள்.

இதேபோல, கூடங்குளம் அணுஉலையில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் அணு உலைக் கழிவுநீரை வங்காள விரிகுடாவில்தான்திறந்துவிடுவார்கள். இதனால் இடிந்தகரை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கிராமங்கள் அழிந்துபோகும். நம் தலை மீது பேராபத்து கத்திபோல் தொங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, கூடங்குளத்தில் அணு உலைகளை மூடுவதுஒன்றுதான், எதிர்காலத்தில் தென்தமிழகத்தைப் பாதுகாக்கும்.

நிலவில் கால் வைக்கலாம். ஆனால், தமிழகத்தின் ஒரு பகுதிஅழிந்துபோகும் என்பதை மத்தியஅரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்றரை ஆண்டு காலம்இடிந்தகரை மக்கள் போராடினர். அரசுகள் கண்டு கொள்ளவில்லை.

போராடியவர்கள் மீது வழக்குகள் போடப்பட்டன. என் மீதும்கூடஒரு வழக்கு இருக்கிறது. நான்அதைப்பற்றிக் கவலைப்படவில்லை.கூடங்குளம் அணுஉலைகளால் தென் தமிழகத்தின் ஒரு பகுதி அழிவுக்கு உள்ளாகும் என்றுமீண்டும் எச்சரிக்கிறேன். இவ்வாறுஅறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்