விழுப்புரம்: இந்தியாவில் மொத்தமுள்ள சுங்கச்சாவடிகளில் 35 சதவீதம் தமிழகத்தில்தான் உள்ளது என்று சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்ட சட்டப்பேரவை உறுதி மொழிக்குழுவினர், ஆய்வின் ஒரு பகுதியாக விக்கிரவாண்டி சுங்கச் சாவடியை ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து குழுவின் தலைவர் கூறுகையில் இந்தியாவிலேயே அதிக அளவு சுங்கச்சாவடிகள் தமிழகத்தில்தான் உள்ளன. இந்தியாவில் மொத்தமுள்ள சுங்கச்சாவடிகளில் 35 சதவீதம் தமிழகத்தில் உள்ளது.
சுங்கச் சாவடிகளில் கட்டணமின்றி செல்ல அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள வாகனங்கள் செல்ல தனி வழியை ஏற்படுத்த வேண்டும். விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருட்களை சுங்கச்சாவடியில் கொண்டு செல்லும்போது, அந்த வாகனங்களுக்கு விலக்களிக்க வேண்டும். இவை தொடர்பாக மாநில அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற 2 ஆண்டுக் காலத்தில் பல்வேறு உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
2 தினங்களுக்கு முன் சர்ச்சை: கடந்த இரு தினங்களுக்கு முன் கள்ளக்குறிச்சி மாவட்ட சுங்கச்சாவடியில் சட்டப்பேரவை உறுதி மொழிக்குழுவைச் சேர்ந்த மோகன் எம்எல்ஏவின் வாகனம் சுங்கவரி கேட்டு தடுத்து நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago