வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி, செகந்திராபாத், மும்பை ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்பட உள்ளன என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, மும்பை பாந்த்ரா ரயில்நிலையம்- வேளாங்கண்ணி இடையே சிறப்பு கட்டண ரயில்(09047) பாந்த்ரா ரயில்நிலையத்தில் இருந்து நாளை(ஆக.27) காலை 10.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 8.35 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுவழித்தடத்தில், வேளாங்கண்ணி- மும்பை வதோரா சிறப்பு கட்டண ரயில்(09048) ஆக.29-ம் தேதி அதிகாலை 4.50 மணிக்கு வேளாங்கண்ணி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 5.30 மணிக்கு வதோரா ரயில் நிலையத்துக்கு சென்றடையும்.
இதேபோல, செகந்திராபாத்- வேளாங்கண்ணி சிறப்பு கட்டண ரயில்( 07125) செப்.4-ம் தேதி காலை 8.40 மணிக்கு செகந்திராபாத் ரயில் நிலையத்தில் புறப்பட்டு, மறுநாள் காலை 8.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுவழித்தடத்தில், வேளாங்கண்ணி- செகந்திராபாத் சிறப்பு கட்டண ரயில்(07126) செப்.6-ம் தேதி வேளாங்கண்ணியில் இருந்து அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 12.30 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.
செகந்திராபாத்- வேளாங்கண்ணி இடையே மற்றொரு சிறப்பு கட்டண ரயில்(07127) செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்து செப்.8-ம் தேதி காலை 8.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுவழித்தடத்தில், வேளாங்கண்ணி- செகந்திராபாத் சிறப்பு கட்டண ரயில்(07128) செப்.10-ம் தேதி வேளாங்கண்ணி ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 1.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும் என கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
14 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago