மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய மேலும் கால அவகாசம் நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்வதற்கான கால அவகாசம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும் போது பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை நீக்கும் வகையில், கட்டணம் செலுத்திய அன்றே பெயர் மாற்றம் செய்து வழங்கும் திட்டத்தை மின்வாரியம் செயல்படுத்தி வருகிறது.

இதற்காக, தமிழ்நாடு முழு வதும் உள்ள வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புதாரர்களுக்கென `சிறப்புப் பெயர் மாற்றம் முகாம்', கடந்த மாதம் 24-ம் தேதி தொடங்கி ஒரு மாதகாலம் வரை மின்வாரியத்தின் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் நடைபெற்று வந்தது.

இந்த முகாம் தொடங்கி வைக் கப்பட்ட நாள் முதல் இதுவரை மொத்தம் 2.68 லட்சம் வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்பு மின் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்து பயன் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தச் சிறப்பு பெயர் மாற்றம் முகாமுக்கான கால அவகாசம் மேலும் ஒரு மாத காலம் அதாவது வரும் செப். 25-ம்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புக்கான பெயர் மாற்றம் தேவைப்படும் பொதுமக்கள் அனைவரும் இந்த கால நீட்டிப்பு அவகாசத்தைப் பயன்படுத்தி, இச்சிறப்பு பெயர் மாற்றம் முகாம் மூலம் தங்களது வீட்டு மின் இணைப்புகள் மற்றும் பொது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்து கொள்ளுமாறு மின்வாரியம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்