சென்னை: விஜயகாந்தின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் தனது 71-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் அவரது பிறந்தநாள் நிகழ்ச்சிகளை அவரது தொண்டர்கள் நடத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் அரசியல், சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: தேமுதிக நிறுவனத் தலைவரும், எனது தோழருமான விஜய்காந்த்துக்கு உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள். முழு உடல்நலத்துடன் புத்துணர்ச்சியையும் பெற்றுப் பல்லாண்டு நீங்கள் மகிழ்ச்சியோடும் நிறைவோடும் வாழ விழைகிறேன்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் அன்பிற்கினிய கேப்டன் விஜயகாந்த்துக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். சகோதரர் விஜயகாந்த் உடல் ஆரோக்கியத்துடன், எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: இன்று பிறந்தநாள் விழா காணும் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவர் அன்புச் சகோதரர் விஜயகாந்த்துக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ்ந்து, தொடர்ந்து நாட்டிற்கு நற்பணியாற்றிட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
» கதையே கேட்காமல் ‘சந்திரமுகி’ ஆக நடிக்க ஒப்புக் கொண்டார் கங்கனா: பி.வாசு
» விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியனின் ‘படைத் தலைவன்’ கிளிம்ப்ஸ் வெளியீடு
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை: தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், எளிய மக்கள் மீது பேரன்பு கொண்ட பண்பாளருமான கேப்டன் விஜயகாந்த்துக்கு, தமிழக பாஜக சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நீண்ட ஆயுளுடன், நிறைந்த நலன்களுடன் மக்கள் பணி தொடர வேண்டுமென்று இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: இன்று 71-வது பிறந்தநாள் காணும் தேமுதிக நிறுவன தலைவர் அன்பு நண்பர் கேப்டன் விஜயகாந்த்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் மக்கள் பணியாற்றிட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: தேமுதிக நிறுவனர் மற்றும் தலைவர் விஜயகாந்த்துக்கு இன்று அவரது 71-ஆம் பிறந்தநாளையொட்டி, எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் நல்ல உடல் நலத்துடன் தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.
மநீம தலைவர் கமல்ஹாசன்: இன்று பிறந்தநாள் காணும் என் மனதிற்கினிய நண்பர், தேமுதிக தலைவர், புரட்சிக் கலைஞர் விஜய்காந்த் பல்லாண்டு வாழ மனதார வாழ்த்துகிறேன்.
சு.திருநாவுக்கரசர்: தேமுதிக நிறுவனத் தலைவரும், சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், புகழ் நிறைந்த திரைப்பட நடிகருமான சகோதரர் கேப்டன் விஜயகாந்த்துக்கு, எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல்நலத்தோடும், நீண்ட ஆயுளோடும், நூற்றாண்டுக்கு மேல் அவர் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago