பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று தனது மனைவியுடன் தரிசனம் செய்தார்.
கோவையில் நேற்று காலை நடைபெற்ற பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என். ரவி, மாலை 5.30 மணிக்கு கார் மூலம் திண்டுக்கல் மாவட்டம் பழநி வந்தார்.
கோயில் தேவஸ்தானம் தண்டாயுதபாணி நிலையத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஆட்சியர் பூங்கொடி, டிஐஜி அபினவ் குமார், கோயில் இணை ஆணையர் மாரிமுத்து ஆகியோர் பூங்கொத்து கொடுத்து ஆளுநரை வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து மின் இழுவை ரயிலில் ஆளுநர் மலைக் கோயிலுக்கு வந்தார்.
ராஜ அலங்காரத்தில் தண்டாயுதபாணி சுவாமியை தனது மனைவியுடன் சென்று தரிசனம் செய்தார். ஆளுநருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் முருகன் படம், பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, கோயில் உட்பிரகாரத்தில் உள்ள போகர் சந்நிதியில் சென்று வழிபட்டார். இரவு 7 மணிக்கு தங்கரதம் இழுத்து வழிபட்டார்.
» மாநில கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை தயார் - அடுத்த மாதம் தமிழக அரசிடம் சமர்ப்பிக்க திட்டம்
பின்னர் இழுவை ரயில் மூலம் அடிவாரத்துக்குச் சென்று காரில் மீண்டும் கோவைக்குப் புறப்பட்டுச் சென்றார். ஆளுநர் வருகையையொட்டி சுமார் 400 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
11 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago