கோவை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை வழியாக கொச்சுவேலி, கொல்லம், மங்களூருவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ஓணம் பண்டிகையை முன்னிட்டு, செகந்திரா பாத் - கொல்லம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்: 07119) 25-ம் தேதி (இன்று) மாலை 5.50 மணிக்கு, செகந்திரா பாதிலிருந்து புறப்பட்டு, மறுநாள் இரவு 11.20 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
இதேபோல, கொல்லம் - செகந்திராபாத் இடையிலான சிறப்பு ரயில் (எண்: 07120), கொல்லத்தில் இருந்து வரும் 27-ம் தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 11.50 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும். செல்லும் வழியில் இந்த ரயில்கள் காயன்குளம், மாவேலிக்கரா, செங்கனூர், திருவல்லா, செங்கனாச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம் நகரம், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா உள்ளிட்ட ரயில்நிலையங்களில் நின்று செல்லும்.
மேலும், எஸ்எம்விடி பெங்களூரு-கொச்சுவேலி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்: 06565), நேற்று மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டது. இன்று காலை 7.15 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். இதேபோல, கொச்சுவேலி-எஸ்எம்விடி பெங்களூரு இடையிலான சிறப்பு ரயில் (எண்:06566) 25-ம் தேதி மாலை 6.05 மணிக்கு கொச்சுவேலியில் இருந்து புறப்பட்டு, நாளை காலை 11 மணிக்கு எஸ்எம்விடி பெங்களூரு சென்றடையும்.
» மாநில கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை தயார் - அடுத்த மாதம் தமிழக அரசிடம் சமர்ப்பிக்க திட்டம்
இந்த ரயில்கள், ஓசூர், தருமபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் நகரம், கோட்டயம், செங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, காயன்குளம், கொல்லம் ரயில்நிலையங்களில் நின்று செல்லும்.
தாம்பரம் - மங்களூரு சென்ட்ரல் இடையிலான சிறப்பு ரயில் ( எண்:06049 ), தாம்பரத்தில் இருந்து வரும் 26, செப்டம்பர் 2-ம் தேதிகளில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.30 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் சென்றடையும்.
மேலும், மங்களூரு சென்ட்ரல் - தாம்பரம் இடையிலான சிறப்பு ரயில் ( எண்:06050 ), மங்களூரு சென்ட்ரலில் இருந்து வரும் 27, செப்டம்பர் 3-ம் தேதிகளில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 3.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
செல்லும் வழியில் இந்த ரயில்கள், சென்னை எழும்பூர், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, சொர்ணூர், குட்டிபுரம், திரூர், கோழிக்கோடு, வடகரா, தலசேரி, கண்ணூர், பைய்யனூர், காசர்கோடு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago