சென்னை: கடற்கரை - எழும்பூர் வரையிலான 4-வது பாதைக்கான பணிகள் நடைபெறவுள்ளதால், பறக்கும் ரயில் வழித்தடத்தில் கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரயில் சேவை ஆக.27-ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது. 7 மாதங்களுக்கு மின்சார ரயில் சேவை இருக்காது என்று சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் பி.விஸ்வநாத் ஈர்யா தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: சென்னை கடற்கரை-எழும்பூர் வரையிலான 4-வது பாதைக்கான பணிகள் நடைபெறவுள்ளதால், சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் வழித்தடத்தில், சென்னை கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரயில் சேவை ஆக.27-ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது. 7 மாதங்களுக்கு மின்சார ரயில் சேவை இருக்காது. அதேநேரத்தில், சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையே மின்சார ரயில் சேவை வழக்கம்போல இருக்கும்.
சென்னை எழும்பூர்-கடற்கரை இடையே 3 பாதைகள் உள்ளன. இரண்டு பாதைகளில் மின்சார ரயில் சேவையும், ஒரு பாதையில் மெயில், சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்த ஒரு ரயில் பாதையில் கூடுதல் ரயில்கள் இயக்கமுடியாத நிலை உள்ளது.
எனவே, சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே 4-வது பாதைக்கான பணிகள் ஆக.27-ம்தேதி தொடங்கவுள்ளன. இத்திட்டத்துக்கு ரூ.279 கோடி செலவிடப்படவுள்ளது. 7 மாதத்தில் பணிகள் முடிக்கப்படும். சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே 122 ரயில் சேவை வழங்கப்பட்டது.
» மாநில கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை தயார் - அடுத்த மாதம் தமிழக அரசிடம் சமர்ப்பிக்க திட்டம்
கடற்கரை- சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்ட பிறகு, 80 மின்சார ரயில் சேவைமட்டும் வழங்கப்படும். திருவள்ளூர்-வேளச்சேரி, கும்மிடிப்பூண்டி- வேளச்சேரி ரயில்கள் சென்னை கடற்கரையில் நிறுத்தப்படும். கும்மிடிப்பூண்டி, ஆவடி, அரக்கோணத்தில் இருந்து வேளச்சேரிக்கு செல்ல வேண்டிய 59 மின்சார ரயில் சர்வீஸ்கள் கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago