சென்னை - குருவாயூர் விரைவு ரயில் உட்பட 5 ரயில்களில் கூடுதலாக தூங்கும் வசதி பெட்டிகள் சேர்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: பயணிகளின் நெருக்கடியை குறைக்கும் வகையில், சென்னை எழும்பூர் - குருவாயூருக்கு இயக்கப்படும் விரைவு ரயில் உட்பட 5 விரைவு ரயில்களில் கூடுதலாக இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூருக்கு ஆக.25, 26, 27 ஆகிய தேதிகளில் காலை 9.45 மணிக்கு புறப்படும் விரைவு ரயிலில் (16127) கூடுதலாக இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்- சென்னை எழும்பூருக்கு ஆக. 27-ம் தேதி இரவு 9.55 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயிலில் (16866) கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி சேர்க்கப்பட்டுள்ளது.

இதுதவிர, பெங்களூரு - கொச்சுவேலி ஹம்சபர் விரைவு ரயில் (16319), கன்னியாகுமரி - புனேக்கு இயக்கப்படும் விரைவு ரயில் (16382) உட்பட 3 விரைவு ரயில்களில் தலாஒரு தூங்கும் இரண்டாம் வகுப்புபெட்டி கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்