சென்னை: திருச்சியில் அறிவாலயம் கட்ட நில அபகரிப்பில் ஈடுபட்டதாக அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சியில் கடந்த 2009-ம் ஆண்டு கட்டப்பட்ட 'கலைஞர் அறிவாலயம்' கட்டிடத்துக்காக, பல கோடி ரூபாய் மதிப்புள்ள தனது நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கியதாக சீனிவாசன் என்பவர், அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக போலீஸில் புகார் அளித்திருந்தார். அதையடுத்து கே.என்.நேருவுக்கு எதிராக கடந்த அதிமுக ஆட்சியில் நில அபகரிப்பு வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் கே.என்.நேரு, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ்முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் தரப்பில், இந்த வழக்கில் இருதரப்பிலும்சமரசமாகி விட்டதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும்என கோரப்பட்டது. அதேபோல,புகார்தாரர் தரப்பிலும் சமரச மனுதாக்கல் செய்யப்பட்டது. அதையேற்ற நீதிபதி, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago