தமிழகத்தின் முன்னுதாரணமாகும் காலை உணவு திட்டம்

By செய்திப்பிரிவு

சென்னையில் நடைபெற்றநிகழ்ச்சி ஒன்றில் மாணவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாடும்போது, பலர் காலையில் உணருந்தாமல் பள்ளிக்கு வருவதாக அதிர்ச்சி தகவல் கிடைத்தது. இதையடுத்து, அதிகாரிகளுடன் ஆலோசித்து, பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை தொடங்க முதல்வர் உத்தரவிட்டார்.

இந்த திட்டம் மூலம் மீண்டும் இந்தியாவுக்கே வழிகாட்டும் முன்மாதிரி மாநிலமாக தமிழகம் உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு மே 7-ம் தேதிதிமுக ஆட்சியின் 2-ம் ஆண்டுதொடக்க நாளில், சட்டப்பேரவையி்ல் 110-வது விதியின் கீழ் காலைஉணவுத் திட்டத்துக்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார். தொடர்ந்து, அரசாணையும் வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு செப்.15-ம் தேதி இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு, தற்போது தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

முதல்வரின் காலை உணவுத்திட்டத்துக்கு நீண்ட வரலாறு உள்ளது. 1900-களின் தொடக்கத்தில் பஞ்சமர்களுக்காக தொடங்கப்பட்ட கர்னல் ஆல்காட் பள்ளிகளில் மதிய உணவு வழங்க வேண்டும் என்ற சிந்தனைக்கு வித்திட்டார் பண்டித அயோத்திதாசர்.

பின்னர், சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர் சர்.பிட்டி.தியாகராயர் தலைமையில் நடைபெற்ற மன்றக் கூட்டத்தில், நாட்டில் முதல்முறையாக 1920 செப்.19-ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், சென்னை ஆயிரம்விளக்கு மாநகராட்சிப் பள்ளியில் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் விரிவுபடுத்தப்பட்டது.

மதிய உணவுத் திட்டத்தால் மாணவர் சேர்க்கை அதிகரித்தது. 1947 ஏப்ரல் 1-ம் தேதி, நிதி இல்லாததால் மதிய உணவுத் திட்டம்கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 1957-ல் அப்போதைய முதல்வர் காமராஜ் மதிய உணவுத் திட்டத்தை மீண்டும் தொடங்கினார்.

1982 ஜூலை மாதத்தில் அப்போதைய முதல்வர் எம்ஜிஆர், 2-5 வயது வரை முன்பருவக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கும், 5 முதல் 9 வயது வரையுள்ள தொடக்கக் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கும் சத்துணவு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

முதலில் கிராமப்புற மாணவருக்கு வழங்கப்பட்டாலும், செப்டம்பர் 1984 முதல் நகர்ப்புறங்களிலும் 10-ம் வகுப்பு வரை பயிலும்மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

1989-ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி, சத்துணவுடன் வாரம் 2 முட்டை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். 1998-ல் வாரம் ஒரு முட்டை வழங்கப்பட்டது. 2006 ஜூலை 15-ம் தேதி வாரந்தோறும் இரண்டு முட்டை வழங்கப்படும் திட்டம் தொடங்கப்பட்டது. 2007 ஜூலை 15 முதல் வாரம்3 முட்டைகள் வழங்கப்பட்டன.

2008 ஜூலை 15 முதல் முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப் பழங்கள் வழங்கப்பட்டன. 2010 முதல் வாரந்தோறும் 5 முட்டைகள் வழங்கப்படுகின்றன.

இதன் நீட்சியே தற்போதைய முதல்வரின் காலை உணவுத் திட்டமாகும். இந்த திட்டம் மொத்தம் 1,545 பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 1,14,095 மாணவ, மாணவிகளுக்கு சத்தான சிற்றுண்டி வழங்குவதற்காக வழிவகுக்கப்பட்டது. இந்த திட்டத்துக்காக ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தற்போது மாநிலம் முழுவதும்உள்ள 31,000 அரசுப் பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1.14 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெற்று வந்த நிலையில், இனி இந்த திட்டத்தால் 17 லட்சம் பேர் பயன்பெறுவர்.

பள்ளி மாணவர்களுக்கு மதியஉணவுடன், காலை உணவும் வழங்க மத்திய அரசின் புதியகல்விக் கொள்கை பரிந்துரைத்தபோதிலும், அந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சிக்கவில்லை. தமிழக அரசோ திட்டத்தை தொடங்கி, மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. முதல்வரின் காலை உணவுத் திட்டம், நாளைய வளமான வாழ்வுக்கான அடித்தளமாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்