தமிழகம்

வேளாங்கண்ணி திருவிழா: நாளை முதல் சிறப்பு பேருந்துகள்

செய்திப்பிரிவு

சென்னை: வேளாங்கண்ணி மாதா தேவாலயத் திருவிழாவை முன்னிட்டு நாளை (ஆக.25) முதல் செப்.11 வரை 850 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு விரைவு போக்குவரத்துக் கழகம்சார்பில் சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய ஊர்களிலிருந்தும் மற்றும் பிற போக்குவரத்துக் கழகங்கள் மூலமாக திருச்சி, தஞ்சாவூர்,சிதம்பரம், புதுச்சேரி, திண்டுக்கல்,மணப்பாறை, ஒரியூர், பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு 850 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இப்பேருந்துகள் நாளை (ஆக.25) முதல் செப்.11-ம் தேதிவரை இயக்கப்படும். பொதுமக்க ளால் முன்பதிவு செய்து பயணிக்கமுடியும். மேலும், குழுவாகப் பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT