ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 33 படகுகளுக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1.23 கோடி வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.
இலங்கை கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகள், படகுமூலம் மீன் பிடிக்கும் உள்நாட்டு மீனவர்களுக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுகிறது. அதேபோல, இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிக்கும் வெளிநாட்டுப் படகுகளுக்கும் தண்டனை மற்றும் அபராதம் விதிப்பதற்கான புதிய சட்டம் இலங்கைமீன்வளத் துறையின் மூலம் 2018 ஜனவரி 24-ல் இலங்கைநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத்தின் மூலம் படகின் நீளத்தைப் பொறுத்து, இலங்கை மதிப்பில் ரூ.50 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.17.5 கோடி வரை அபராதமும், கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு சிறைத் தண்டனையும் விதிக்க முடியும்.
இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதில் இருந்து இலங்கை கடற் படையினரால் சிறைப் பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் நீதிமன்றக் காவலுக்குப் பிறகு விடுதலை செய்யப்படுகின்றனர். ஆனால், கைப்பற்றப்பட்ட படகுகளைப் பெறுவதற்கு அந்நாட்டு நீதிமன்றத்தில் படகின் உரிமையாளர் ஆஜராகி, ஆவணங்களைச் சமர்ப்பித்து வாதிட்டால் மட்டுமே, படகு விடுவிக்கப்படுகிறது. இல்லையென்றால் படகுகளை இலங்கை நீதிமன்றங்கள் நாட்டுடமையாக்கி விடுகின்றன.
மீனவர்கள் கோரிக்கை: இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, இலங்கையில் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள, தமிழகத்தைச் சேர்ந்த படகுகளுக்கு நிவாரணம்வழங்க வேண்டும் என்று தமிழகமீனவர்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்று, கடந்த ஜனவரிமாதம் தமிழக அரசு 108 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலாரூ.5 லட்சம், 17 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் என மொத்தம் ரூ.5.66 கோடி நிவாரணம் வழங்கியது.
முதல்வரின் பொது நிவாரண நிதி: கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி ராமேசுவரம் அருகே மண்டபத்தில் நடந்த மீனவர் மாநாட்டில், இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு, தற்போது பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளதமிழக மீனவர்களின் படகுகள் சிலவற்றுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மீனவப் பிரதிநிதிகள், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், 21 விசைப் படகுஉரிமையாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம், 12 நாட்டுப் படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் என மொத்தம் 33 படகுகளின்உரிமையாளர்களுக்கு ரூ.1.23 கோடியை, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்குவதற்கான ஆணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago