சென்னை: உலகப் புகழ்பெற்ற ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகளில் ஒன்றாக சென்னை ஐசிஎஃப் விளங்குகிறது. இங்கு 71,000-க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இங்கு தற்போது வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் கவனம் செலுத்தப்படுகிறது. முதல் வந்தே பாரத் ரயில் கடந்த 2018-ம்ஆண்டு தயாரிக்கப்பட்டது. இந்தரயிலின் சேவை டெல்லி - வாரணாசி இடையே கடந்த 2019-ம்ஆண்டு பிப்ரவரி 15-ந்தேதி தொடங்கியது.
தற்போது, 25-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. பயணிகள் வரவேற்பு அதிகரித்துள்ளதால், வந்தே பாரத் ரயில் தயாரிப்பை அதிகப்படுத்த ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி, 2023-24-ம் நிதியாண்டில் சென்னை ஐசிஎஃப்-ல் மட்டும் 736 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் முதல் அதிவேக ரயில் திட்டப் பிரிவில், வந்தே பாரத் ரயில் திட்டத்துக்கு 2023-ம் ஆண்டுக்கான `நாட்டின் சிறந்த திட்டத்துக்கான விருது' சென்னை ஐசிஎஃப்-க்கு வழங்கப்பட்டுள்ளது. இந்திய திட்ட மேலாண்மை நிறுவனம் இந்த விருதை வழங்கியுள்ளது.
கடந்த 21-ம் தேதி நடைபெற்ற விழாவில், நிதி ஆயோக் நிறுவன இயக்குநர் விஜய்குமாரிடமிருந்து ஐசிஎஃப் பொது மேலாளர் பி.ஜி.மால்யா விருதைப் பெற்றுக்கொண்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago