மறைமலை நகர்: மறைமலை நகரில் சமீப காலமாக மாடு, நாய் போன்ற கால்நடைகள் பல்வேறு முக்கிய சாலைகளில் பகல், இரவு நேரத்தில் உலா வருகின்றன. இதனால், மக்கள் ரோட்டில் நடந்து செல்ல முடியாமலும் வாகனங்களில் செல்ல முடியாமலும் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
இதுகுறித்து இந்து தமிழ் திசை நாளிதழில் உங்கள் குரல் பகுதியில் தொலைபேசி வாயிலாக மறைமலை நகரை சேர்ந்த பழனியப்பன் என்பவர் புகார் கூறியிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளி மாணவியை நெடுஞ்சாலையில் சுற்றி திரிந்த மாடு முட்டியது. அதில் அவர் படுகாயம் அடைந்தார்.இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தெருக்களில் சுற்றித் திரியும் மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகளை கட்டுப்படுத்த அரசு எச்சரிக்கை விடுத்தது. ஆனால் இதனை கால்நடை வளர்ப்போர் கண்டுகொள்ளவே இல்லை.
இந்நிலையில் மறைமலை நகர் நகராட்சி பகுதிகளில் தெரு நாய்களின் நடமாட்டம் மிகவும் அதிகரித்துள்ளது. அதிகாலை நேரத்திலேயே 10-க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம்கூட்டமாக தெருக்களில் உலா வருகின்றன. நடைபயிற்சி செல்வோர் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் பணிகளுக்கு செல்வோர் சாலையில் பயணிக்கும்போது இந்த நாய்கள் அவர்களை சுற்றி குறைப்பதோடு கடிக்கவும் முற்படுகின்றன.
» சாலை விபத்தில் உயிரிழந்த செய்தி ஒளிப்பதிவாளரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு
» இந்திய மல்யுத்த கூட்டமைப்பை சஸ்பெண்ட் செய்தது உலக மல்யுத்த கூட்டமைப்பு
இதனால் அவர்கள் அச்சத்துடன் ஓட வேண்டி உள்ளது. இதனை தவிர்க்க நடைப்பயிற்சி மேற்கொள்வோர் கைகளில் தடியுடன் நடக்க வேண்டி உள்ளது. பள்ளி மாணவ -மாணவிகள் தங்களது உணவு பைகளை கீழே போட்டு போட்டுவிட்டு அருகில் உள்ளவீடுகளில் தஞ்சம் அடைகின்றனர்.இரவு நேரங்களில் தனியாக தெருக்களில் நடந்து வருவோரை இந்த நாய்களின் கூட்டம் குறைத்துக் கொண்டே துரத்துவதும் வாடிக்கையாக உள்ளது.
இதுபோன்ற இடையூறுகளை போக்க நகராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்துநாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். மேலும், நகராட்சி போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் வாகனங்கள், மாடுகள் மீது மோதிவாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர்.
அதுமட்டுமின்றி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களையும் மாடுகள் தள்ளிவிடுகின்றன. இரவு நேரங்களில் வாகனத்தின் வெளிச்சம் பட்டு மாடுகள் மிரண்டு ஓடுவதால் விபத்து ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள்இடையூறாக சுற்றித்திரியும் மாடுகள் மற்றும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியது: நாய்களாலும் மாடுகளாலும் பொதுமக்கள் தினமும் பாதிக்கப்படுவது குறித்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதற்காக நகராட்சி சார்பில் நாய் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு நாய் பிடிக்க உரிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும்ப்ளூ கிராஸ் அமைப்பு மூலம் நாய்களைபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் மாடுகளைப் பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே மாடுகளின் உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டும் அதனை மீறி தொடர்ந்து மாடுகளை சாலையில் விடுகின்றனர். மாடுகளை பிடிக்கவும் நாய்களை கருத்தடை செய்து கட்டுப்படுத்தவும் நகர மன்ற கூட்டத்தில் ஒப்புதல் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago