இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட 33 படகுகளின் மீனவர்களுக்கு ரூ.1.23 கோடி நிவாரணம்: அரசாணை வெளியீடு

By செய்திப்பிரிவு

சென்னை: இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தமிழக மீனவர்களின் 33 படகுகளுக்கு ரூ.1.23 கோடி நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தமிழக மீனவர்களின் 33 படகுகளுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மீனவர் நலனில் அக்கறைக் கொண்டுள்ள இவ்வரசானது, இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளுக்கு நிவாரணம் வழங்குவதில் விடுபட்டு போன 21 விசைப் படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5,00,000 மற்றும் 12 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,50,000 ஆக மொத்தம் 33 படகுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1.23 கோடி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கி அரசாணை கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, சார்பில் 14.08.2023 அன்று ஆணைகள் வெளியிடப்பட்டது, என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE