தமிழக மீனவர்களை தாக்கி ரூ.5 லட்சம் பொருள் கொள்ளை - தாக்குதலை தடுக்க வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

By செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை கடற்கொள்ளையர்கள் கடுமையாக தாக்கி, ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த பாஸ்கர் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில் 4 மீனவர்களும், செந்தில் அரசன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் 3 மீனவர்களும், சிவபாலன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் 4 மீனவர்களும் நேற்று முன்தினம் இரவு மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

ஆறுகாட்டுத்துறைக்கு கிழக்கே 22 நாட்டிக்கல் மைல் தூரத்தில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு 3 படகுகளில் வந்த இலங்கையைச் சேர்ந்த 9 கடற்கொள்ளையர்கள், மீனவர்களின் படகுகளில் ஏறி, அவர்களை வீச்சரிவாள், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கினர்.

மேலும், மீனவர்களின் படகிலிருந்து ஜிபிஎஸ் கருவி, மீன்பிடி உபகரணங்கள், செல்போன், டார்ச் லைட் உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறித்துக் கொண்டு சென்றுவிட்டனர்.

இதையடுத்து படுகாயமடைந்த மீனவர்கள் நேற்று அதிகாலை கரை திரும்பினர். பாஸ்கர், அருள்வேல், அருள்ராஜ் ஆகியோர் நாகை அரசு மருத்துவமனையிலும், செந்தில் அரசன், மருது, வினோத், வெற்றிவேல் உள்ளிட்ட மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவலறிந்த நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கவுதமன் உள்ளிட்டோர் மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

முதல்வர் கடிதம்: இதற்கிடையே, இலங்கை நாட்டவரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் முதல்வர் கூறியிருப்பதாவது: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை நாட்டினரின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் மீனவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதோடு, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது.

இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள், உடல் ரீதியாக பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதோடு, மீனவர்களிடமிருந்த பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, இத்தாக்குதல்களில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து, சட்டத்தின்முன் நிறுத்ததேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உரிய தூதரக வழிமுறைகளைப் பயன்படுத்தி இலங்கை அரசுடன் தொடர்புகொண்டு, மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடல் கொள்ளையர்களைக் கைது செய்யவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்