சென்னை தினம்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை தினத்தை ஒட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

16 ஆம் நூற்றாண்டுக் காலகட்டத்தில், தொண்டை மண்டலக் கடற்கரையின் மீனவக் கிராமங்களில் ஒன்றாக இருந்த ‘சென்னப்பட்டணம்’, இன்று உலகப் பெருநகரமாக உருவாகியுள்ளது.

இன்று (ஆகஸ்ட் 22) சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நகரில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகையில் சென்னை தின புகைப்படக் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

முன்னதாக, சென்னை தினத்தை ஒட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள வாழ்த்தில், "மெட்ராஸ் தினத்தில் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்! வியப்பூட்டும் கலாசார பன்முகத்தன்மை, ஆழமாக வேரூன்றிய ஆன்மிகம், அறிவார்ந்த வலிமை ஆகியவற்றின் இந்த தொடர்ச்சியை அதே ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் மேலும் முன்னெடுத்து கொண்டாடுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மெட்ராஸ் என்ற பெயர் சென்னை என மாற்றப்பட்டதால் அரசு விழாக்களில் சென்னை தினம் என்றே குறிப்பிடப்படுகிறது. ஆனால் ஆளுநர் மெட்ராஸ் டே என்றே தனது வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE