சென்னை: சென்னை ஐ.சி.எஃப் தொழிற்சாலையில் 8 முன்பதிவு இல்லாத பெட்டிகள் உள்பட 22 பெட்டிகளுடன் சாதாரண வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணி தொடங்கியுள்ளது. அடுத்த 2 மாதங்களில் இரண்டு ரயில்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
சென்னை பெரம்பூர் ஐ.சி.எஃப். தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் வகை ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்லவரவேற்பு கிடைத்து வருகிறது. இங்கு, இதுவரையில் 31 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 25 வந்தேபாரத் ரயில்கள் நாட்டின் பல்வேறுவழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இவை அனைத்தும்‘ஏசி’ பெட்டிகளாகவும், சொகுசுரயிலாகவும் இருக்கின்றன. மற்றவிரைவு ரயில்களை ஒப்பிடுகையில், கட்டணமும் அதிகமாக இருப்பதாக பயணிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, சாதாரண மக்களும் ‘வந்தே பாரத்’ போன்ற வசதிகளை பெற, முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் கூடிய சாதாரண வந்தே பாரத் அல்லது அந்த்யோதயா வந்தே பாரத் என்றபெயரில் ரயில்களை இயக்கநிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, சாதாரண வந்தேபாரத் ரயில் தயாரிப்பு பணிஐ.சி.எஃப். தொழிற்சாலையில் தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: வந்தே பாரத் ரயில் போன்ற வசதிகளோடு சில மாற்றங்களை செய்து, சாதாரண வந்தே பாரத் ரயிலுக்கான பெட்டிகள் தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த ரயிலில், தனியாக இன்ஜின்கள் இருபுறமும் பொருத்தப்படும். மேற்கு வங்கத்தில் உள்ள சித்தரஞ்சன் தொழிற்சாலையில், இதற்கான இன்ஜின்கள் தயாரிக்கப்படும்.
இந்த ரயிலில், 8 முன்பதிவு இல்லாத பெட்டிகள், மூன்றாம் வகுப்பு ‘ஏசி’ பிரிவில் 12 பெட்டிகள், மாற்றுத் திறனாளிகள், லக்கேஜ் உட்பட மொத்தம் 22 பெட்டிகள் இருக்கும். இந்த வகை ரயில்பெட்டி தயாரிப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதத்துக்குள் இரண்டு ரயில்கள்தயாரித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago