போதைக்கு அடிமையாகாமல் இருந்தால் வாழ்வில் முன்னேற முடியும்: அமைச்சர் எஸ்.ரகுபதி பேச்சு

By செய்திப்பிரிவு

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டை போற்றும் வகையிலும்,‘போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற தமிழகஅரசின் திட்டத்துக்கு ஒத்துழைக்கும் விதமாக பல் சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பில் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் ‘உறுதி’ குறும்படத்தை வெளியிடும் விழா சென்னை சாலிகிராமத்தில் நேற்று நடந்தது.

சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ‘உறுதி’ குறும்படத்தை வெளியிட்டார். தமிழ்நாடுஎம்ஜிஆர் திரைப்பட கல்லூரியின் தலைவர், நடிகர் ராஜேஷ் இந்நிகழ்வுக்கு தலைமை வகித்து, குறும்படத்தை பெற்றுக்கொண்டார்.

விழாவில் அமைச்சர் எஸ்.ரகுபதி பேசியதாவது: போதை பழக்கத்துக்கு ஒருவர் அடிமையாகி விட்டால், அவரது வாழ்க்கை அத்துடன் தொலைந்து விடும். அதிலிருந்து மீள முடியாது. வெளியே வரமுடியாது.

எனவே போதை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்துஇளைஞர்கள் திருந்த வேண்டும். போதை பழக்கத்துக்கு அடிமையாகாமல் இருந்தால் வாழ்வில் நிச்சயம் முன்னேற முடியும். சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் பல் சமய நல்லுறவு இயக்கத்தின் மாநில தலைவர் முகம்மது ரபி, இயக்குநர் மங்கை அரிராஜன், ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.ராமசாமி, கோட்டை அப்பாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்