தமிழக அரசியலில் அதிமுக மாநாடு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது: வைகோ கருத்து

By செய்திப்பிரிவு

சிவகாசி: அதிமுக மாநாடு தமிழக அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

சிவகாசியில் நாரணாபுரம் சாலையில் கட்டப்பட்டுள்ள லலிதா திருமண மஹால் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. மஹால் உரிமையாளர்கள் தன பாலன், குமரேசன் வரவேற்றனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மஹாலை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது: அதிமுக மாநாடு தமிழக அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக நடத்தி வருகிறார். அரசியலில் பணம் கொடுத்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற சூழ்நிலை உள்ளது.

சிவகாசி எம்பியாக இருந்த போது இன்டர் நெட் திட்டம், விருதுநகர் - கொல்லம் அகல ரயில் பாதை திட்டத்தை மத்திய அரசிடம் கேட்டுப் பெற்று செயல்படுத்தினேன். பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து பாடுபடுவேன். மதுரையில் செப்டம்பரில் நடைபெறும் மாநாட்டில் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று பேசினார்.

ஈரோடு எம்பி கணேச மூர்த்தி, மதிமுக துணை பொதுச் செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் எம்.பி சிப்பிப் பாறை ரவிச் சந்திரன், அசோகன் எம்.எல்.ஏ., மேயர் சங்கீதா, துணை மேயர் விக்னேஷ் பிரியா, ஒன்றியக் குழு துணை தலைவர் விவேகன் ராஜ், காளீஸ்வரி குழும இயக்குநர் ஏ.பி.எஸ்.செல்வராஜன், மதிமுக மத்திய மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், மாநகர செயலாளர் ராஜேஷ், நாரணாபுரம் எஸ்.எஸ்.பிரபாகரன் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்