சிவகங்கை: ‘‘மதுரையில் ரூ.400 கோடி செலவழித்து ஆடம்பரமாக நடத்திய மாநாட்டால் யாருக்கும் பலனில்லை ’’ என சிவகங்கையில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
சிவகங்கையில் கட்சி நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்ற தினகரன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் பணம் கொடுத்து மக்களை கூட்டி வந்து ஆடம்பரமாக நடத்திய மாநாட்டால் மக்களுக்கும், நடத்தியவர்களுக்கும் பலனில்லை. வெற்று விளம்பரத்துக்காக ரூ.400 கோடி செலவழித்து மாநாடு நடத்தி உள்ளனர்.
உதயநிதி ஸ்டாலினால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் என்றால் ஏன் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்? பழனிசாமி ஆட்சி ஜெயலலிதாவின் ஆட்சி இல்லை என்பதால்தான் திமுகவை மக்கள் தேர்வு செய்தனர். ஆனால் பழனிசாமிக்கு சற்றும் சளைத்தவர் அல்ல என்பதை ஸ்டாலின் நிரூபித்து கொண்டிருக்கிறார். ஸ்டாலின், பழனிசாமி ஆகிய இருவரும் ஒரே குணாதிசயங்களை கொண்டவர்கள்.
அவர்களுக்கு மாற்றாக அமமுகவை மக்கள் உறுதியாக தேர்ந்தெடுப்பர். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்தை நடிகர் ரஜினி துறவியாக நினைத்து காலில் விழுந்து ஆசி பெற்றிருப்பார். அதில் தவறு இல்லை. நானே அவரை ( யோகி ஆதித்யநாத் ) துறவியாகத்தான் பார்க்கிறேன். பாஜக ஊழல் செய்ததா, இல்லையா என்பதை வருகிற மக்களவை தேர்தலில் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago