மெரினா கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவனை தேடும் பணி தீவிரம்

By செய்திப்பிரிவு

சென்னை: மெரினா கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவனை, 2-வது நாளாக ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்புப் படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சென்னை வடபழனியை சேர்ந்தவர் அருள்(14). இவர் கோடம்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம்வகுப்பு படித்து வந்தார். அருள், தனது நண்பர்களான யோகேஸ்வரன், தர்ஷன் ஆகியோருடன் மெரினா கடற்கரையில் நேற்று முன்தினம் குளிக்கச் சென்றிருந்தார். திருவள்ளுவர் சிலை அருகே கடலில் குளித்துக் கொண்டிருந்த போது, மாணவர்கள் மூவரும் திடீரென கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.

அப்போது, மாணவர்களின் கூச்சலைக் கேட்டலை அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக கடலோர மீட்புப் படையினருக்கும், காவல் துறைக்கும் தகவல் கொடுத்தனர். கடலோர மீட்புப் படையினர் விரைந்து வந்து மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் மாணவர்கள் யோகேஸ்வரன், தர்ஷன் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால், அருளை மட்டும் இரவு வரை எங்கும் தேடியும் கிடைக்கவில்லை.

இதையடுத்து, நேற்றும் மாணவர் அருளைத் தேடும் பணி நடைபெற்றது. கடலோர மீட்புப் படையினர் ஹெலிகாப்டர் உதவியுடன் மாணவனை தீவிரமாகத் தேடினர். அதேபோல மெரினாதீயணைப்புத் துறையினரின் மீட்புப் படையினரும் முகத்துவாரம் முதல் அண்ணா சதுக்கம் வரை மாணவனைத் தேடும் பணியில்ஈடுபட்டனர். இரவு வரை தேடியும் மாணவர் கிடைக்கவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்