வெங்காய அறுவடை தொடங்கிவிட்டதால் வரத்து அதிகரித்து விலை வெகுவாக குறைந்து கிலோ ரூ.60 முதல் 90 வரை விற்பனையாகிறது. மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
தென் மாவட்டங்களில் உள்ள பெரிய மார்க்கெட்களில் ஒன்றாக திண்டுக்கல் வெங்காய மார்க்கெட் உள்ளது. திண்டுக்கல் சுற்றுப்பகுதி கிராமங்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் திண்டுக்கல் வெங்காய மார்க்கெட்டுக்கு வெங்காயம் வரத்து இருக்கும். இங்கிருந்து இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்து வந்த நிலையில், தற்போது உள்ளூர் தேவையையே பூர்த்தி செய்ய முடியாத நிலையில் வெங்காய ஏற்றுமதி நிறுத்தப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, தொடர் வறட்சி காரணமாக வெங்காய விலை கிலோ ரூ.180 என்ற உச்சத்தை தொட்டது. வெளிமாநிலங்களில் இருந்து வெங்காயம் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு தேவைகள் ஓரளவு பூர்த்தி செய்யப்பட்டும் விலை குறையவில்லை. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை ஓரளவு கைகொடுத்ததால் வெங்காய விலை உச்சத்தில் இருப்பதை கண்டு விவசாயிகள் பெரும்பாலானோர் வெங்காயம் நடவு செய்தனர். இவை தற்போது அறுவடைக்கு வந்துள்ளன. இதன் காரணமாக திண்டுக்கல், தேனி, அரியலூர், திருப்பூர் மாவட்டங்களில் இருந்து அதிக அளவிலான வெங்காயம் திண்டுக்கல் வெங்காய மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வருகிறது. இதனால் வெங்காய விலை படிப்படியாக குறைந்து நேற்று கிலோ ரூ.60 முதல் ரூ.90 வரை விற்றது. முதல்தர வெங்காயம் வெளிமார்க்கெட்டில் ரூ.100 வரை விற்பனையாகிறது.
விதை வெங்காயம் குறையவில்லை
வெங்காயம் விலை குறைந்தபோதும் விதைக்கு தேவையான பழைய வெங்காயம் இருப்பு குறைவாகவே உள்ளதால், விதை வெங்காயம் கிலோ ரூ.100 முதல் ரூ.140 வரை விற்பனையாகிறது. இதை விவசாயிகள் நடுவதற்கு வாங்கிச் செல்கின்றனர். இந்த ஆண்டு பருவமழையால் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பவில்லை. பல கண்மாய், குளங்கள் வறண்டே காணப்படுகின்றன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயராததால் விவசாயக் கிணறுகளில் நீர் மட்டமும் உயரவில்லை. இறவை பாசனத்துக்கு கிணறுகளில் தண்ணீர் உள்ள விவசாயிகள் வெங்காயம் பயிரிடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது நடவு செய்தால் மூன்று மாதம் கழித்து அறுவடைக்கு வரும்போது பற்றாக்குறையால் விலை உயரும் என்ற நம்பிக்கையில் வெங்காயம் பயிரிடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதுகுறித்து கமிஷன் கடை உரிமையாளர் கே.ராஜூ கூறியதாவது: வரத்து அதிகரிப்பால் வெங்காய விலை குறையத் தொடங்கிவிட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்பு அதிகபட்சமாக கிலோ ரூ.180 ஐ தொட்டது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத உச்சவிலை இது.
தற்போது வெங்காய அறுவடை தொடங்கியதால், வரத்து அதிகரித்து விலை குறைந்து வருகிறது. தற்போது கிலோ ரூ.60 முதல் ரூ.90 வரை விற்கும் சின்ன வெங்காயம், பொங்கல் விழாவுக்கு பிறகு கிலோ ரூ.40 வரை குறைய வாய்ப்புள்ளது என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 secs ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago